மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில், பக்தர்கள் வந்து சென்ற பின்பு, கிருமி நாசினி மருந்து தெளிக்கப்படுகிறது.
கோவை மாவட்டத்தில், காரமடை அரங்கநாதர் கோவில், மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலமாகும். இங்கு வார நாட்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்களும், விடுமுறை நாட்களில் ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்களும் வந்து செல்வர். ஊரடங்கை அடுத்து, 71 நாட்களுக்குப் பின்பு, காரமடை அரங்கநாதர் கோவில் திறக்கப்பட்டது. பக்தர்களின் வருகை குறைவாக உள்ளது. இருந்தபோதும் காலையில் நடை திறந்து மதியம் வரை, பக்தர்கள் வந்து சென்ற பின்பு, கோவில் ஊழியர்கள் கோவிலில் நடைபாதைகள், வளாகத்திலுள்ள கைபிடித்த கம்பிகளில், கிருமிநாசினி மருந்து தெளிக்கின்றனர். அதேபோன்று மாலையிலும் கோவிலில் கிருமிநாசினி மருந்துகள் தெளிக்கப்படுகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதம் ஏதும் வழங்குவதில்லை. அரங்கநாதப் பெருமாளை வழிபட்டு செல்வதற்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.