தஞ்சாவூர், தஞ்சாவூர் பெரியகோவிலில் வாராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா இன்று(09ம் தேதி) கணபதி ஹோமம், இனிப்பு அலங்காரத்துடன் துவங்கியது.
தஞ்சாவூர் பெரியகோவிலிலுள்ள வாராஹி அம்மனுக்கு ஆண்டுதோறும் 10 நாட்கள் ஆஷாட நவராத்திரி விழா கொண்டாடப்படும். இதில் அம்மனுக்கு நாள்தோறும் அபிஷேகமும், அலங்காரமும் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு ஆஷாட நவராத்திரி விழா இன்று(09ம் தேதி) மாலை கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து வாராஹி அம்மனுக்கு இனிப்பு அலங்காரம் நடைபெற்றது. சாமி தரிசனத்திற்கு பக்தர்கள் சமூக இடைவெளியுடன் அனுமதிக்கப்பட்டனர்.
தொடர்ந்து நாளை (10 -ம் தேதி) மஞ்சள் அலங்காரமும், 11 -ம் தேதி குங்கும அலங்காரமும், 12 -ம் தேதி சந்தன அலங்காரமும், 13 -ம் தேதி தேங்காய்பூ அலங்காரமும், 14 -ம் தேதி மாதுளை அலங்காரமும், 15 -ம் தேதி நவதானிய அலங்காரமும், 16 -ம் தேதி வெண்ணெய் அலங்காரமும், 17 -ம் தேதி கனி அலங்காரமும், 18 -ம் தேதி காய்கனி அலங்காரமும் நடைபெறும். நிறைவு நாளான 19 -ம் தேதி அம்மனுக்கு புஷ்ப அலங்காரமும், இரவு கோவிலுக்குள் புறப்பாடும் நடைபெறுகிறது.