கோவில்களில் ஆனி அமாவாசை வழிபாட்டில் பக்தர்கள் பங்கேற்பு
பதிவு செய்த நாள்
10
ஜூலை 2021 02:07
பொள்ளாச்சி, உடுமலை சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில் அமாவாசையையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.ஆனி அமாவாசையை முன்னிட்டு, பொள்ளாச்சி பத்ரகாளியம்மன் கோவிலில், அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன.
நெல்லிக்கனி மாலை சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அம்மன் அருள்பாலித்தார். பொள்ளாச்சி மாகாளியம்மன் கோவிலில், சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.ஜோதிநகர், விசாலாட்சி அம்மன் உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவிலில், சிறப்பு அபிேஷகம்,அலங்கார பூஜைகள் நடைபெற்றன.கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.ஊரடங்கு தளர்வு அறிவித்து, கோவிலில் பக்தர்கள் தரிசனதுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அமாவாசை வழிபாட்டில், சமூக விலகலுடன் பக்தர்கள் மனமுருகி சுவாமி தரிசனம் செய்தனர். ஆனைமலைஆனைமலை மாசாணியம்மன் கோவிலுக்கு, அமாவாசையை முன்னிட்டு, பல மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்தனர். அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், ஆராதனை, நான்கு கால பூஜை நடந்தது. அதிக அளவிலான பக்தர்கள் வந்தனர் .உடுமலை உடுமலை அருகே திருமூர்த்திமலையில், சிவன், பிரம்மா, விஷ்ணு ஒருங்கே அருள்பாலிக்கும், அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்ட பிறகு, கோவிலில், பக்தர்களுக்கு, அனுமதி வழங்கப்பட்டது.இந்நிலையில், நேற்று காலை முதல், ஆனி அமாவாசையையொட்டி, சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்கள் பங்கேற்று, சிறப்பு அலங்காரத்தில், அருள்பாலித்த, மும்மூர்த்திகளை தரிசித்தனர். பலர், ரேக்ளா வண்டிகளிலும் வந்து, தரிசனம் செய்து, திரும்பினர்.உடுமலை சுற்றுப்பகுதியை சேர்ந்த கோவில்களில், சிறப்பு பூஜைகள் நடந்தது. கோவில்களில், சமூக இடைவெளியை பின்பற்றி, வழிபாடு நடத்த, பக்தர்கள் அறிவுறுத்தப்பட்டனர். - நிருபர் குழு -
|