சிலர் தேவை இருக்கோ, இல்லையோ பிறரிடம் உதவி கேட்டுக் கொண்டே இருப்பார்கள். “இறைநம்பிக்கையுடனும் சுயமரியாதையுடனும் வாழ்பவர்களுக்கு சுவனம் உண்டு” என்கிறது இஸ்லாம். . * உயர்ந்த (கொடுக்கும்) கரம் தாழ்ந்த (வாங்கும்) கரத்தைவிட சிறந்ததாகும். * யார் தேவையற்று இருக்க விரும்புகிறாரோ அவரை இறைவன் தேவையற்றவராக ஆக்கிவைப்பான். * எந்த நிலையிலும் யாரிடமும் எதையும் கேட்கக் கூடாது. உதாரணமாக குதிரை ஓட்டும்போது உங்கள் கையில் இருந்த சாட்டை தவறி கீழே விழுந்தாலும், அதை பிறரை எடுத்து தர சொல்லக்கூடாது. நாமே கீழே இறங்கி அதை எடுத்துக்கொள்ள வேண்டும். இனியாவது நாம், யாசிப்பை பற்றி பிறரிடம் எதுவும் வாய்திறந்து வாசிக்காமல் இருப்போமே...