நடராஜருக்கு பஞ்ச சபைகள் என ஐந்து கோயில்கள் உள்ளன. அவை சிதம்பரம் – கனகசபை, மதுரை – வெள்ளியம்பலம், திருநெல்வேலி – தாமிரசபை, திருவாலங்காடு – ரத்தினசபை, குற்றாலம் – சித்திர சபை. ஆருத்ரா தரிசன நன்னாளில் இத்தலங்களை தரிசிப்பதை பக்தர்கள் பாக்கியமாக கருதுகின்றனர்.