சிவனுக்குரிய வடிவங்களில் முதன்மையானது நடராஜர் வடிவமே. இவர் ஆடுவது ஆனந்த தாண்டவம். அம்பலவாணர், சபாபதி, கூத்தப்பெருமான், நடேசன், சித்சபேசன், நடராஜன், கனகசபாபதி, பொன்னம்பலம் என பல பெயர்கள் உண்டு. தமிழ் இலக்கியங்களில் இவரை ‘ஆடல்வல்லான்’ என்று குறிப்பிட்டுள்ளனர். ஆட்டத்தில் நாயகனான நடராஜரை வழிபடுவோருக்கு வாழ்வில் மகி்ழ்ச்சி நிலைத்திருக்கும்.