Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருவாசகம் தந்த திருவாதவூர் திருமணத்தன்று நிச்சயதார்த்தம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
குண்டுக்குள் கோயில்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஜூலை
2021
06:07


கோயில்கள் பெரும்பாலும் சமதளப்பகுதியில் கட்டியிருப்பது வழக்கம். கேரள மாநிலம் பாலக்காடு கல்பாத்தி விஸ்வநாத சுவாமி கோயில் பாதாளத்தில் உள்ளது. இதை மலையாளத்தில் ‘குண்டுக்குள் கோயில்’  என்கின்றனர். ‘குண்டு’ என்றால் ‘பள்ளம்’.   
15ம் நுாற்றாண்டில் கல்பாத்தி புழைக்கரையில் லட்சுமியம்மாள் என்னும் மூதாட்டி வாழ்ந்தார். இவரது குடும்பத்தினர் மயிலாடுதுறையைச் சேர்ந்தவர்கள். மயிலாடுதுறை மாயூரநாத சுவாமி கோயில் போல கல்பாத்தியிலும் சிவன் கோயில் கட்ட மூதாட்டி விரும்பினார். அதற்காக காசியாத்திரை சென்று பாணலிங்கம் கொண்டு வந்தார். கோயில் கட்டுவதற்காக தன் சொத்துக்களை அரசாங்கத்திற்கு எழுதியும் வைத்தார்.
பாலக்காடு பகுதியை ஆட்சி செய்த மன்னர் இட்டிகோம்பி மூதாட்டியின் கோரிக்கையை ஏற்று கோயில் கட்டப்பட்டது. காசியில் இருந்து வந்ததால் சுவாமி ‘காசி விஸ்வநாதர்’ எனப்பட்டது. பிற்காலத்தில் விசாலாட்சி அம்மன் சிலையும் பிரதிஷ்டை செய்யப்பட்டது.விசாலாட்சி தெற்கு நோக்கி இருப்பதால் எமபயம் நீக்கும் சக்தி படைத்தவளாக இருக்கிறாள்.  
  தரைதளத்தில் இருந்து தாழ்வாக கட்டப்பட்ட கருங்கல் கோயில் இது. இங்கு தெற்கு, கிழக்கு திசைகளில் 18 படிகள் கீழிறங்கிச் செல்லும் வகையில் உள்ளன. கோயிலுக்குள் இருந்தே ஆற்றுக்குச் செல்ல படித்துறைகள் உள்ளன.
மயிலாடுதுறையைப் போல இங்கும் ஐப்பசி தேர் திருவிழா நடக்கிறது. இதனால் இவ்வூர் கேரள மயிலாடுதுறை எனப்படுகிறது. விஸ்வநாதர் தேருடன் கல்பாத்தி லட்சுமி நாராயணர், சாத்தப்புரம் பிரசன்ன கணபதியும் தனித்தனி தேர்களில் எழுந்தருள்கின்றனர்.  
கேரள சிவன் கோயில்களில் இங்கு மட்டுமே நடராஜருக்கு கனகசபை உள்ளது. நவக்கிரகங்கள் தம்பதியராக காட்சி தருகின்றனர். திருமணத்தடை நீங்கவும், குழந்தை பேறு கிடைக்கவும் சுவாமிக்கு வஸ்திரம் சாத்தி அர்ச்சனை செய்கின்றனர். ஆயுள் விருத்திக்காக ருத்ராபிேஷகம், மிருத்யுஞ்ஜய ஜபம் செய்கின்றனர். முன்னோர் நினைவாக கல்பாத்தி நதிக்கரையில் தர்ப்பணம், சிராத்தம் செய்வது விசேஷம். இதனால் ‘காசியில் பாதி கல்பாத்தி’ என்னும் சொல்வழக்கு உண்டு.  
எப்படி செல்வது : பாலக்காடு டவுன் பஸ் ஸ்டாண்டில் இருந்து 3 கி.மீ.,

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
மனநலம், உடல்நலம் சிறக்கும். ஆயுள் அதிகரிக்கும். மரணபயம் ... மேலும்
 
குறைந்தது 9ல் ஆரம்பித்து 11,13, என ஒற்றைப்படையாக இருக்க ... மேலும்
 
ஆசையை குறைக்க வேண்டும் என்பது இதன் ... மேலும்
 
படுக்கும் முன் திருநீறு பூசி சிவன், துர்க்கையை ... மேலும்
 
இருக்க கூடாது. இறப்பு வீட்டில் காரியம் நடக்கும் போது மட்டும் இதை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar