சிவன்மலை கோயில் பெட்டியில் ஆதார் கார்டு, பஞ்சாங்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஜூலை 2021 05:07
திருப்பூர்: சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவிலில் ஆண்டவர் உத்தரவு பெட்டியில் ஆதார் கார்டு பஞ்சாங்கம் நாணயம் வைத்து பூஜை துவங்கியது.
திருப்பூர் மாவட்டம் காங்கயம் - சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவிலில் உள்ள ஆண்டவர் உத்தரவு பெட்டியில் பக்தர் ஒருவரின் கனவில் முருகப்பெருமான் தோன்றி குறிப்பிடும் பொருள் வைத்து பூஜிக்கப்படுவது வழக்கம்; அந்த பொருள் ஏதாவது ஒரு வகையில் சமுதாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது ஐதீகம்.கோவை - நரசிம்மநாயக்கன்பாளையத்தை சேர்ந்த லதா என்பவர் கனவில் உத்தரவான பொருட்கள் நேற்று மூலவர் சன்னதியில் பூ கேட்டு பின் உத்தரவு பெட்டியில் வைக்கப்பட்டது. பெட்டியில் ஆதார் கார்டு பஞ்சாங்கம் 10 ரூபாய் நாணயம் சிறிய மணி வைத்து பூஜை நடந்தது.
கோவில் சிவாச்சாரியார்கள் கூறுகையில் ஆதார் கார்டு மற்றும் ரூபாய் நாணயம் ஆகியன மத்திய அரசுடன் தொடர்புடையது. இவற்றில் ஏதேனும் முக்கியமான புதிய உத்தரவுகள் வெளியிடப்படலாம். பஞ்சாங்கம் பூஜை மணி ஆகியன ஆன்மிகத்துடன் தொடர்புடையவை; தமிழகத்தில் ஆன்மீக ரீதியான நிகழ்வுகள் கோவில் திருப்பணிகள் அதிகளவில் நடக்க வாய்ப்புள்ளது என்றனர்.