பதிவு செய்த நாள்
11
ஜூலை
2021
05:07
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே ஆஷாட நவராத்திரி விழாவையொட்டி, மஞ்சள் அலங்காரத்தில், நவசக்தி வாராஹி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பெரியநாயக்கன்பாளையம் அருகே கூடலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பாரதி நகர் செல்லும் வழியில், சாமி தோட்ட வளாகத்தில் ஸ்ரீ நவசக்தி மஹா வாராஹி அம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆஷாட நவராத்திரி விழா துவங்கியது. முதல் நாள் வாராகி அம்மன், மஞ்சள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு, அருள்பாலித்தார். இது குறித்து, கோவில் நிர்வாகிகள் கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும், ஆனி மாத அமாவாசைக்கு அடுத்த நாள் ஆஷாட நவராத்திரி விழா துவங்கும். இதில் ஒன்பது நாளும், வாராகி அம்மன் ஒன்பது அலங்காரங்களில், பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். முதல் நாள் மஞ்சள் அலங்காரத்தில் அருள்பாலித்தார். தொடர்ந்து, குங்குமம், சந்தனம், திருநீறு உள்ளிட்ட பல்வேறு அலங்காரங்களில், பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். கோவில் காலை, 6:00 மணி முதல் மதியம்,1:00 மணி வரையும், மாலை, 6:00 மணி முதல் இரவு, 8:30 மணி வரையும் திறந்திருக்கும் என்றனர்.