மானாமதுரை : மானாமதுரை பஞ்சமுக பிரத்தியங்கிரா தேவி கோயிலில் கொரோனா தொற்று ஒழிய வேண்டி சிறப்பு யாகம் நடைபெற்றது. மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டியும், கொரோனா தொற்று ஒழிய வேண்டியும் தஞ்சை கணபதி சுப்பிரமணியன் தலைமையிலான சிவாச்சாரியார்கள் சிறப்பு யாகம் நடத்தி பிரத்தியங்கிரா தேவிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்தனர். ஏற்பாடுகளை நிர்வாகிகள் ஞானசேகர சுவாமி,மாதாஜி செய்திருந்தனர்.