ராமேஸ்வரம்: தனுஷ்கோடி அருகே ராமர் கோவிலை சுற்றியுள்ள காட்டுக் கருவேல மரங்களை அகற்ற இந்து அறநிலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் நிர்வாகத்தின் கீழ் ராமாயண வரலாற்றில் தொடர்புடைய கோதண்டராமர் கோவில் உள்ளது. இக்கோவில் தனுஷ்கோடி செல்லும் தேசிய நெடுஞ்சாலை அருகில் உள்ளதால், தினமும் ஏராளமான (ஊரடங்கு தவிர்த்து) பக்தர்கள், சுற்றுலா பயணிகள் தரிசித்து செல்கின்றனர். தனுஷ்கோடி தேசிய சாலையில் இருந்து வடக்கே 200 மீட்டர் தூரம் பிரிந்து செல்லும் சாலையில் அமைந்துள்ள இக்கோவிலை சுற்றி வளர்ந்துள்ள காட்டுகருவேல மரங்களால், கோயிலின் அழகை காண முடியாமல், சாலை சாலையோரத்தில் உள்ள முள் மரங்கள் முகத்தை பதம் பார்ப்பதால், பக்தர்கள் வேதனை அடைகின்றனர். எனவே முள் மரங்களை அகற்றி கோவிலின் புனிதம் காக்க இந்து அறநிலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.