Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் தரிசன ... அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆனி பிரமோற்சவ தீர்த்தவாரி அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆனி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இன்று ஆடி மாதப்பிறப்பு: ஆரம்பிச்சாச்சு ஆடி கோலாகலம்
எழுத்தின் அளவு:
இன்று ஆடி மாதப்பிறப்பு: ஆரம்பிச்சாச்சு ஆடி கோலாகலம்

பதிவு செய்த நாள்

17 ஜூலை
2021
10:07

தட்சிணாயன புண்ணிய காலமான ஆடிமாதம் இன்று தொடங்குகிறது. இந்நாளில் கோயில், முன்னோர் வழிபாடு செய்தால் நற்பலன் உண்டாகும்.

ஆடி அம்மனுக்குரிய மாதமாகப் போற்றப்படுகிறது. ஆடிச் செவ்வாய் (ஜூலை 20,27, ஆக.3,10) வெள்ளிக் கிழமைகளில் (ஜூலை 23,30, ஆக.6,13) அம்மன் கோயில்களில் வளைகாப்பு வைபவம் நடைபெறும். பக்தர்கள் வழங்கும் கண்ணாடி வளையல்களால் அம்மனுக்கு அலங்காரம் செய்வர். இதை அணியும் கன்னியருக்கு திருமணம் கைகூடும். பிள்ளை இல்லாத பெண்களுக்கு குழந்தை வரம் உண்டாகும். மழை காலத்தின் தொடக்கமான ஆடியில் தொற்று நோய் பரவாமல் தடுக்க கிருமி நாசினியான வேம்பு, எலுமிச்சை, எளிதில் ஜீரணமாகும் கூழ் அம்மனுக்கு படைக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்படும்.இது தவிர ஆடித்தபசு (ஜூலை23), ஆடிக் கார்த்திகை (ஆக.2), ஆடிப் பெருக்கு (ஆக.3), ஆடி அமாவாசை (ஆக.8), ஆடிப்பூரம்(ஆக.11), நாக சதுர்த்தி (ஆக.12) கருட பஞ்சமி (ஆக.13) என மாதம் முழுவதும் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடந்த வண்ணமிருக்கும். இத்தகு சிறப்பு மிக்க ஆடியில் அம்மனை வழிபடுவோம்.

மணமாலையும் மஞ்சளும் சூடி...: ஆடிவெள்ளிக்கிழமை ராகு காலத்தில் துர்க்கையம்மனுக்கு எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பு. வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் குழுக்களாக அம்மனுக்கு 108, 1008 விளக்குப் பூஜை செய்யலாம். இதனால் ராகுதோஷம் நீங்குவதோடு விரைவில் மணமாலை சூடும் யோகம் அமையும்.

கல்வி வளர்ச்சிக்கு...: சக்தி பீடங்களில் ஒன்றான திருச்சி மாவட்டம் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயிலில் அகிலாண்டேஸ்வரி அருள்புரிகிறாள். இங்கு ஆடி வெள்ளியில் ஸ்ரீ வித்யாபூஜை வைதீக முறைப்படி நடத்துகின்றனர். ஆடி வெள்ளியன்று இந்த அம்மன் சீடராக இருக்க சிவனே குருவாக இருந்து உபதேசிக்கிறார். இங்கு மாணவர்கள் வழிபட்டால் கல்வி வளர்ச்சி ஏற்படும்.

ஆடித்தபசு நன்னாள்: திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் நடக்கும் பெரிய திருவிழா ஆடித்தபசு. அம்பிகை சிவபெருமானிடம் தன் சகோதரனான விஷ்ணுவுடன் சேர்ந்து காட்சி தருமாறு வேண்டினாள். அதற்கு சிவன் பொதிகை மலை புன்னை வனத்தில் தவம் புரியக் கட்டளையிட்டார். அம்பிகை ஊசி முனையில் நின்று தவமியற்ற ஆடிபவுர்ணமியும் உத்திராட நட்சத்திரத்திரமும் கூடிய நன்னாளில் (ஜூலை 23) சிவபெருமான் மாலொரு பாகன் கோலத்தில் காட்சியளித்தார். இந்நாளில் கோமதியம்மனுக்கு சிறப்பு பூஜை நடக்கும். தங்க சப்பரத்தில் வீதியுலா வரும் அம்மனுக்கு சுவாமி சங்கர நாராயணராக ரிஷப வாகனத்தில் காட்சியளிப்பார். அதன்பின் ஊஞ்சல் உற்சவம் நடைபெறும்.

நினைத்தது நிறைவேற...: ஆடி வெள்ளியன்று (ஜூலை 23,30, ஆக.6,13) வாசலில் கோலமிட்டு பூஜையறையில் விளக்கேற்றி நைவேத்யமாக அம்மனுக்கு பால் பாயாசம் அல்லது சர்க்கரைப் பொங்கல் நைவேத்யம் செய்வர். லலிதா சகஸ்ரநாமம், அம்மன் பாடல்களைப் பாடி வழிபட்டால் நினைத்தது நிறைவேறும். அப்போது சிறுமிகளுக்கு ரவிக்கை, தாம்பூலம், சீப்பு, குங்குமச் சிமிழ், கண்ணாடி வளையல் அளித்து அவர்களை அம்மனாகப் பாவித்து உணவளிப்பர். ஆடி வெள்ளிகளில் மாலை கோயில்களில் விளக்குபூஜை நடக்கும். 108, 1008 விளக்குகள் வரிசையாக வைத்து சுமங்கலிகள் பூஜை செய்வர். அப்போது அம்மனுக்கு நவசக்தி அர்ச்சனை செய்வது சிறப்பு. ஒன்பது சிவாச்சாரியார்கள் ஒன்பது வகை மலர்களால் ஒன்பது சக்திகளை ஒரே நேரத்தில் அர்ச்சிப்பதே நவசக்தி அர்ச்சனையாகும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று அதிகாலை `சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. பக்தர்கள் ... மேலும்
 
temple news
சென்னை : திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், சொர்க்கவாசல் திறக்கப்பட்டதுசென்னை, ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, வைகுண்ட வாயில் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர் ; ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் "கோவிந்தா,கோபாலா"கோஷம் முழங்க பரமபத வாசல் ... மேலும்
 
temple news
கோவை ; காரமடை அரங்கநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு விழா நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar