மகாபலேஸ்வரா கோவில் கர்ப்பகிரகத்துக்குள் புகுந்த தண்ணீர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஜூலை 2021 12:07
கார்வார்: உத்தர கன்னடாவின் கும்டா அருகே உள்ள கோகர்ணாவில் மகாபலேஸ்வரா கோவில் உள்ளது. பலத்த மழையால், இக்கோவிலின் கர்ப்பகிரகத்துக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. சுவாமிக்கு அபிஷேகம் செய்யும் தண்ணீர் வெளியேறி, சோம சூத்ரா கால்வாய் வழியாக கடலில் கலக்கும். இந்த கால்வாய் ஆண்டுக்கு ஒரு முறை கிராம பஞ்சாயத்து சார்பில் துார்வாரப்படும். இந்த முறை கால்வாய் துார்வாரப்பட வில்லை. இத்துடன் அபிஷேக நீர் வெவளியேறும் பாதையும் அடைக்கப்பட்டுள்ளது. இதனால் மழை நீர் கால்வாய் வழியாக, கோவில் கர்ப்ப கிரகத்துக்குள் புகுந்துள்ளது. கர்ப்பகிரகத்தில் இரண்டாவது முறையாக தண்ணீர் புகுந்துள்ளது.