விழுப்புரம் : விழுப்புரம் அடுத்த நரையூர் ராகவேந்திரர் சுவாமி கோவிலில் 10ம் ஆண்டு சம்வத்ஸராபிஷேகம் நடந்தது.அதனையொட்டி, கடந்த 14ம் தேதி காலை 8:00 மணிக்கு கலச பூஜை, வேள்வி விஷேச அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, காலை 11:00 மணிக்கு தீபாராதனையும், இரவு 7:00 மணிக்கு ராகவேந்திர பக்தி பஜனை சபா சார்பில் பஜனை மற்றும் தீபாராதனையும் நடந்தது. ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் சங்கரலிங்கம் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.