எஸ்.புதூர்: எஸ்.புதூர் அருகே பொன்னடப்பட்டி மேட்டுப்பாளையம் ஆயர்பாடியில் அமைந்துள்ள கோகுல கிருஷ்ணன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. பாலாஜி சிவாச்சாரியார் தலைமையில் மூன்று கால யாக பூஜைகள் நடத்தப்பட்டு கோயில் அறங்காவலர் ஏ.வி.நாகராஜன் தலைமையில் கும்பாபிஷேகம் நடந்தது. மூலவரான கோகுலகிருஷ்ணனுக்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி காட்சி அளித்தார். சமூக இடைவெளியுடன் பக்தர்கள் பங்கேற்றனர்.