பழநி : பழநி முருகன் கோயில் ரோப் காரில் வருடாந்திர பராமரிப்பு பணிகள் நேற்று துவங்கியது. பழநி மலைக்கோயிலுக்கு செல்ல படிப்பாதை, ரோப் கார், வின்ச் ஆகியவை உள்ளன. தற்போது பக்தர்கள் தரிசனத்திற்காக படிப்பாதை, வின்ச் செயல்பாட்டில் உள்ளது.ரோப்காரில் ஆண்டுதோறும் வருடாந்திர வழக்கமாக பராமரிப்பு பணி நடைபெறும். இந்தாண்டு நேற்று முதல் பராமரிப்பு பணிகள் துவங்கியுள்ளது. இதில் புதிய ரோப் பொருத்தப்பட உள்ளது. புதிதாக தயாரிக்கப்பட்டுள்ள பெட்டிகள் மாற்றப்படும். இயந்திரங்களில் உள்ள தேய்மானம் குறித்து ஆய்வு செய்து, பழுதடைந்த பாகங்களை பொருத்தி, சோதனை ஓட்டத்திற்கு பின் செயல்பாட்டுக்கு வரும் என, கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.