மீனாட்சி அம்மன் கோயில் யானைக்கு கூடுதலாக மண் தரை அமைக்க முடிவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஜூலை 2021 06:07
மதுரை:மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் யானை பார்வதிக்கு கூடுதலாக மண் தரை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதை பின்பற்றி மற்ற கோயில் யானைகளுக்கும் மண் தரை அமைக்கப்பட உள்ளது.
இக்கோயில் யானை பார்வதிக்கு கண் பார்வை கோளாறு ஏற்பட்டது. தொடர் சிகிச்சையாலும், சென்னை கால்நடை மருத்துவ பல்கலை டாக்டர்களாலும் மீண்டும் கண் பார்வை கிடைக்க தொடங்கியுள்ளது. கண்ணில் படர்ந்திருந்த வெள்ளை படலம் மறைய தொடங்கியுள்ளது. யானை ஓய்வுஎடுக்கும் மண்டபத்தில் கருங்கல் தரை உள்ளது. யானையின் கால்கள் பாதிக்கக்கூடாது என்பதற்காக சில ஆண்டுகளுக்கு முன் மண்டபத்தின் ஒருபகுதியில் கருங்கற்களை பெயர்த்தெடுத்து மண் தரை அமைக்கப்பட்டது.
இது யானையின் கால்களுக்கு வசதியாக உள்ளதால், கூடுதலாக மண் தரை அமைக்க கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதுபோன்று மற்ற கோயில்களிலும் யானைகளுக்கு மண் தரை அமைப்பது குறித்து சட்டசபையில் அறிவிக்க அரசு திட்டமிட்டுள்ளது.மேலும் தீ விபத்து நடந்த வீரவசந்தராய மண்டபத்தை சீரமைப்பதற்கான கருங்கற்கள், கோயில் நிர்வாகத்திற்கு சொந்தமான செங்குளம் பண்ணையில் உள்ளன. விரைவில் டெண்டர் இறுதிசெய்யப்பட்டு, செதுக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட உள்ளன.