உடுமலை : ஆடி மாத மூல நட்சத்திரத்தையொட்டி, குட்டைத்திடல் கோவிலில், ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. உடுமலை வடக்கு குட்டைத்திடல் விநாயகர் கோவிலில், ஆஞ்சநேயர் சன்னதி அமைந்துள்ளது. இங்கு சனிக்கிழமைகளில், சிறப்பு அலங்கார பூஜைகள் நடக்கும். ஆடிமாத மூல நட்சத்திரத்தையொட்டி, நேற்று, காலை முதல் ஆஞ்சநேயருக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ஆஞ்சநேயரை பக்தர்கள் தரிசித்தனர்.