சிறுவர்கள் மணலைக் கூட்டி களிமண்ணில் சுவாமி சிலை செய்து கோயில் கட்டி விளையாடுவது வழக்கம். இது போல கூழாங்கல்லை வைத்து விளையாட்டாக சிறுவர், சிறுமியர் கட்டிய ஒரு கோயில் நிஜ கோயிலாக மாறியது. சிறுவர்கள் கட்டிய கோயில் என்பதால் அம்மன் ‘சின்ன மாரியம்மன்’ எனப்படுகிறாள். ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தில் இக்கோயில் உள்ளது. ஆரம்பத்தில் ஒரு கூழாங்கல்லை வைத்து வழிபட்டனர். நாளடைவில் அம்மன் சிலையை பிரதிஷ்டை செய்தனர். நீண்டகாலம் குழந்தை இல்லாதவர்கள் கூட இங்கு வழிபட்டு பலன் பெறுகின்றனர்.