ஸ்ரீரங்கம் ரயில்வே ஸ்டேஷன் அருகில் உள்ள நந்தவனத்தின் நடுவே பழமையான வீடு இருக்கிறது. இங்கு அன்னகாமாட்சியம்மன் அருள்புரிகிறாள். 200 ஆண்டுக்கு முன்பு நவாப் ராஜமாணிக்கம் என்பவரிடம் தனக்கு சாதாரண வீடு போல கோயில் கட்ட வேண்டும் என அம்மன் கூறியதால் இதை கட்டியுள்ளனர். செவ்வாயன்று ராகுகாலத்தில் (மதியம் 3.00- 4.30 மணிக்குள்) அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்படும். ஆடி வெள்ளிக்கிழமைகளில் ஒவ்வொரு விதமான பாவாடை அலங்காரம் செய்யப்படும். முதல் வாரம் தாழம்பூ, 2வது வாரம் மரிக்கொழுந்து, 3வது வாரம் ரோஜா, 4வது வாரம் மல்லிகை, கடைசி வாரம் தங்கப்பாவாடை அலங்காரம் செய்யப்படும்.