பொதுவாக கோயில்களில் அன்னம் நைவேத்யமாக படைக்கப்படும். ஆனால் புதுக்கோட்டை மாவட்டம் சத்திரம் என்ற கிராமத்திலுள்ள காமாட்சி கோயிலில் அம்மனுக்கு அரிசியை நைவேத்யமாக படைக்கின்றனர். இதற்காக பெண்கள் வீட்டில் குத்திய கைக்குத்தல் அரிசியை காணிக்யைாக வழங்குகின்றனர். இந்த அம்மனுக்கு மஞ்சள் காப்பு மட்டுமே அணிவிக்கப்படும். இந்த மஞ்சளை கோயிலுக்குள்ளேயே தயாரிக்க வேண்டும் என்பது நிபந்தனை.