பதிவு செய்த நாள்
23
ஜூலை
2021
04:07
ஊரப்பாக்கம்: ஊரப்பாக்கம், பச்சை நிற ஷீரடி சாய்பாபா தியான மையம் சார்பில் சிறப்பு பூஜை நடக்கிறது.செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கம், ஆதனுார் மெயின் ரோடு அருகே பச்சை நிற ஷீரடி சாய்பாபா தியான மையம் உள்ளது. கொரோனா ஊரடங்கு விதிமுறைகளால் பக்தர்கள் கூட்டமின்றி, தியான மையத்தின் மஹா கும்பாபிஷேகம் இனிதே நடந்து முடிந்தது. இந்நிலையில், நேற்று மண்டலாபிஷேக ஹோமம், அபிஷேகம், அர்ச்சனை மற்றும் வியாழக்கிழமை அன்னதானம் ஆகியவை சிறப்பாக நடந்தன.இன்று காலை 8:00 மணி முதல், ஸ்ரீசக்ர மஹாமேருவுக்கு சிறப்பு அபிஷேகம், அர்ச்சனை, பகல் ஆரத்தி, நவாவரண பூஜை ஆகியவை நடக்கவுள்ளன. நாளை காலை 7:00 மணி முதல் குரு பூர்ணிமா வியாச பூஜை நடக்கிறது. தொடர்ந்து அபிஷேக அலங்கார பூஜைகள் நடக்கின்றன.பக்தர்கள் அனைவரும் கொரோனா விதிமுறைகளை கடைப்பிடித்து பங்கேற்கலாம் என, தியான மைய நிர்வாகத்தின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.