பதிவு செய்த நாள்
23
ஜூலை
2021
05:07
சூலூர்: ஆடி வெள்ளியை ஒட்டி, அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
ஆடி மாத முதல் வெள்ளியை ஒட்டி, சூலூர் வட்டார அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. பால், தயிர், இளநீர், சந்தனம், மஞ்சள் மற்றும் திரவிய அபிஷேகங்கள் நடந்தன. தொடர்ந்து, சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. ராமாச்சியம்பாளையம் மாகாளியம்மன், சூலூர் காட்டூர் மாகாளியம்மன், அங்காளம்மன், மாரியம்மன் உள்ளிட்ட கோவில்களில் நடந்த பூஜையில் ஏராளமான பெண்கள் பங்கேற்று வழிபட்டனர். மஞ்சள் சரடு, பூக்கள் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.