காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் குரு பூர்ணிமா, வியாச பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஜூலை 2021 01:07
காஞ்சிபுரம்: காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் குரு பூர்ணிமா, வியாச பூஜை நடைபெற்றது.
இத்தல காமாட்சி அம்மனை வேத வியாசர் பிரதிஷ்டை செய்துள்ளார். தங்க விமானத்தின் கீழ் அம்மன் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறாள். அம்மனுக்கு முன்னால் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்ரீசக்கரம் உள்ளது. இத்தலத்தில் தான் ஆதிசங்கரர் ஆனந்தலஹரி பாடினார். இங்கு நேற்று (24ம் தேதி) குரு பூர்ணிமாவை முன்னிட்டு, குரு பூர்ணிமாவை முன்னிட்டு, காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் வியாச பூஜை நடந்தது. சங்கர பகவத்பாதர் விக்ரகத்திற்கு அபிஷேகம், ஆராதனைகள் செய்யப்பட்டன. பக்தர்கள் தரிசனம் செய்தனர்.