பதிவு செய்த நாள்
25
ஜூலை
2021
07:07
தொண்டாமுத்தூர்: ஈஷா சம்ஸ்க்ருதி மாணவர்கள் இந்திய பாரம்பரிய கலைகளை உலகம் முழுவதும் கொண்டு செல்வார்கள், என, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தெரிவித்தார்.
குரு பவுர்ணமியை முன்னிட்டு, சத்குருவின் சிறப்பு சத்சங்கம் ஆன்லைன் வாயிலாக நடந்தது. இதில், ஈஷா சம்ஸ்க்ருதி மாணவர்களின் இசை, நடனம் மற்றும் களரி நிகழ்ச்சி நடந்தது. ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு பேசியதாவது: மனிதர்கள் அமைதியாகவும், ஆனந்தமாகவும் இருப்பதற்கு ஏராளமான சாகசம் செய்கின்றனர். துன்பம், இன்பம், கோபம், அமைதி என மனித அனுபவங்கள் அனைத்தும் நமக்குள் இருந்து தான் வருகிறது. ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்கள், சிறு வயதில் இருந்தே, இசை, நடனம், களரி போன்றவற்றில், தங்கள் வாழ்வை முதலீடு செய்துள்ளனர். 24 மணி நேரமும் இந்த கலைகளுடன், வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் கற்ற கலைகளை, தற்போது மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுக்க தயாராகிவிட்டனர். அதற்காக, புராஜக்ட் சம்ஸ்க்ருதி என்ற திட்டம், இந்த குரு பவுர்ணமி நாளில் துவங்கப்பட்டுள்ளது. இந்திய பாரம்பரிய கலைகளை உலகம் முழுவதும் எடுத்து செல்வர். இவ்வாறு, சத்குரு தெரிவித்தார்.