புதுச்சேரி : தட்டாஞ்சாவடியிலுள்ள கம்பளி சாமி மடத்தில், சுவாமி கீதானந்தகிரி குருமகராஜ் 114வது குரு ஜெயந்தி பவுர்ணமி பூஜை நடைபெற்றது. விழாவில், மடாதிபதி ஆனந்தபாலயோகி கிரி தலைைம தாங்கினார்.ஊஞ்சல் உற்சவம், கர்நாடக சங்கீத நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, மகா தீபாராதனை காண்பிக்கப் பட்டது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை யோகாஞ்சலி பொது மேலாளர் சண்முகம் கஜேந்திரன் மற்றும் விழா குழுவினர் செய்தனர்.