பதிவு செய்த நாள்
25
ஜூலை
2021
07:07
விழுப்புரம் : விழுப்புரம், வி.மருதுார் ஏரிக்கரை எல்லைக் காளியம்மன் கோவிலில் 30வது ஆண்டு உற்சவ விழா நடந்தது.உற்சவத்தையொட்டி, நேற்று முன்தினம் காலை அம்மனுக்கு அபிஷேக, ஆராதனை நடந்தது. 10:00 மணிக்கு சக்தி கரகம் ஊர்வலம், மதியம் 12:00 மணிக்கு சாகை வார்த்தலும், இரவு அம்மன் வீதியுலாவும் நடந்தது.இன்று 25ம் தேதி மாலை 5:00 மணிக்கு விளக்கு பூஜையும், வரும் 30ம் தேதி இரவு 8:00 மணிக்கு கும்பம் கொட்டுதல் நடக்கிறது. ஏற்பாடுகளை, அறங்காவலர் குழுத் தலைவர் செங்குட்டுவன், அ.தி.மு.க., ராஜசேகர், பிரகாஷ், பா.ஜ., ஜெயசங்கர், சுவாமிநாதன், சின்னகவுண்டர் செய்து வருகின்றனர்.