பொங்கலுார்:சிவன்மலை கோவிலில், அமைச்சர்கள் சேகர்பாபு, சாமிநாதன் ஆகியோர் தரிசனம் செய்தனர்.காங்கயம், சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு நேற்று இரவு, 9:00 மணிக்கு, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு வந்தார். அறநிலையத்துறை அதிகாரிகள் வரவேற்றனர். அதன்பின் சுவாமி தரிசனம் செய்த அமைச்சர் தங்கத்தேரை பார்வையிட்டார்.தொடர்ந்து, அறநிலையத்துறை அதிகாரிகளிடம் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் குறித்து கேட்டறிந்தார். பக்தர்கள் மற்றும் உடன் வந்த கட்சி தொண்டர்கள் போட்டி போட்டு கொண்டு செல்பி எடுத்தனர். அவரிடம் மனு அளிக்க வந்த மாற்றுத்திறனாளியிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.திருப்பூர் தெற்குஎம்.எல்.ஏ., செல்வராஜ் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர். அமைச்சர் வருகையால், கோவில் வளாகம் முழுவதும் துாய்மை செய்யப்பட்டதால், பளிச் என காணப்பட்டது.