பதிவு செய்த நாள்
21
ஜூன்
2012
10:06
திருநெல்வேலி:வசவப்புரம் ராமசுவாமி கோயில் கும்பாபிஷேகம் இன்று (21ம் தேதி) நடக்கிறது. கும்பாபிஷேகத்தில் பேஜாவார் இளைய மடாதிபதி பங்கேற்கிறார்.தூத்துக்குடி மாவட்டம் வசவப்புரம் ராமசுவாமி கோயிலில் ராமர், சீதை, லட்சுமணர், ஹனுமன் சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இக்கோயில் மகா கும்பாபிஷேக விழா கடந்த 19ம் தேதி துவங்கியது. பகவத் பிரார்த்தனை, அனுக்யா புண்யாஹ வாஜனம், மதுபர்க பூஜை, ஆச்சார்ய பூஜை, ரித்விக் வர்ணனம், ஜலா ஹரணம், ம்ருத் சங்கரஹனம், வாஸ்து பூஜை, ந்யுனாதி ரேகசாந்தி பூஜைகள் நடந்தது.காலை 11.30 மணிக்கு தீவார தேவதா பூஜை, பாலிகா தேவதா ஸ்தாபனம், கலச ஸ்தாபனம், மகா மங்கள் ஆரத்தி, பிரார்த்தனை, வேத பாராயணம், புனப்பூஜை, ஸ்வஸ்திவாசன, மங்கள ஆரத்தி பூஜைகள் நடந்தது. நேற்று காலை ராமர், சீதா, லெட்சுமணர், ஹனுமன் மூல மந்த்ர ஹோமங்கள், புருஷ ஷூக்தம், பளித்தா ஸூக்தம், மன்யுஸூக்தம், பவமான ஸூக்தம், ம்ருத்யுஞ்ஜய ஹோமம், தன்வந்திரி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், வாஸ்து ஹோமங்கள், புனப்பூஜை, நைவேத்யம், மகா மங்கள ஆரத்தி நடந்தது. மாலையில் தான்யாதிவாஸம், ஜலாதிவாசம், வஸ்த்ராத்வாசம், வேதபாராயணம், சயனாதிவாசம், ஸ்வஸ்தி, மகா மங்கள ஆரத்தி, அஷ்டபந்தனம், மருந்து சாத்துதல் நடக்கிறது.இன்று(21ம் தேதி)காலை 6 மணிக்கு சம்ப்ரோக்ஷன ஹோமங்கள் பூர்த்தி, பலிதானாதிகள், பூர்ணாஹூதி, விமான ஸ்ந்யாஸம், பிராண பிரதிஷ்டை, பீட பூஜை, பிம்ப ஆவாஹனம், மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. கும்பாபிஷேகத்தில் உடுப்பி பேஜாவார்மடம் இளைய மடாதிபதி ஸ்ரீ ஸ்ரீ 1008 விஸ்வப்பிரசன்ன தீர்த்தர் சுவாமிகள் கலந்து கொள்கிறார். ஏற்பாடுகளை ராமசுவாமி கோயில் பக்த சபாவினர் மற்றும் பொதுமக்கள் செய்துள்ளனர்.