ராமேஸ்வரத்தில் ஆடி விழாவிற்கு பக்தர்களுக்கு அனுமதி : கோரிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஜூலை 2021 10:07
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோவிலில் நடக்கவுள்ள ஆடி திருவிழாவிற்கு பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என ஹிந்து மக்கள் கட்சியினர் கோரிக்கை விடுத்தனர்.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் ஆக., 1 முதல் ஆடி திருக்கல்யாண விழா துவங்குகிறது. இதில் முக்கிய விழாவான ஆடித்தபசு, ஆடி திருக்கல்யாணம் விழாவை கோவில் வளாகத்தில் சிறப்பாக நடத்த வேண்டும். இதில் அரசு வழிகாட்டுதலுடன் பக்தர்கள் அனைவரையும் தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என ஹிந்து மக்கள் கட்சியினர், பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி துணை செயலர் சரவணன் கூறுகையில் : பிற மதத்தின் திருவிழாவிற்கு ஏராளமான பக்தர்களுக்கு அரசு அனுமதி அளித்தது போல், ராமேஸ்வரம் கோவிலில் நடக்கவுள்ள ஆடி திருவிழாவை சுவாமி, அம்மனை தரிசிக்க பக்தர்களை அனுமதிக்க வேண்டும். இதன் மூலம் பக்தர்கள் மன நிம்மதி அடைந்து, பெரும் பாக்கியம் அடைவார்கள் என்றார்.