மீனாட்சி கோயில் வீரவசந்தராய மண்டபம் புனரமைப்பு பணி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஜூலை 2021 10:07
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தீ விபத்திற்குள்ளான வீரவசந்தராய மண்டபம் புனரமைப்பு பணிகள் மூன்று ஆண்டுகளில் முடிக்கப்படும், என, சுற்றுலா, பண்பாடு , சமய அறநிலையத்துறை முதன்மை செயலாளர் சந்திரமோகன் தெரிவித்தார்.
திருமலைநாயக்கர் மகாலை ஆய்வு செய்தவர் கூறியதாவது: திருமலைநாயக்கர் மகால் ரூ.8.27 கோடியில் புனரமைக்கப்படும். ரூ.1.7 கோடியில் ஒளி ஒலி காட்சிக்கு ஏற்ற வகையில் புதிய விளக்குகள் அமைக்கப்படவுள்ளன. அதற்கான ஒப்பந்தபணிகள் நடக்கிறது. ஜனவரியில் அரசாணை வெளியிடப்பட்டாலும் தேர்தல், கொரோனாவால் தாமதம் ஏற்பட்டது. தொல்லியல் சின்னங்களை பார்வையாளர்கள் சேதப்படுத்துவதை தவிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. அபராதம் விதிப்பது எந்தளவுக்கு பயன்தரும் என தெரியவில்லை.மீனாட்சி அம்மன் கோயில் வீரவசந்தராய மண்டபத்திற்கு தேவையான கற்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஸ்தபதி குழுவிற்கு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. புனரமைப்பு பணிகள் முடிந்த பிறகு கும்பாபிேஷகம் குறித்து அறிவிக்கப்படும்.கீழடியில் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருட்கள் இடம் பெற அருங்காட்சியகம் அமைக்கும் பணி கொரோனாவால் தாமதமானது. விரைவில் அருங்காட்சியக பணிகள் துவங்கும். பாரம்பரிய தொன்மையான கட்டடங்களை பாதுகாக்கவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது, என்றார். கலெக்டர் அனீஷ்சேகர், மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் உடன் சென்றனர்.