திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் திருக்கூடல் மலை சூட்டுக்கோல் ராமலிங்க விலாசம் நவநீத பெருமாள் 102வது பிரம்மோற்ஸவ விழா துவங்கியது. ஆண்டுதோறும் 24 நாட்கள் நடக்கும் இவ்விழா இந்தாண்டு கொரோனா தொற்றால் 3 நாட்களுக்கு மட்டும் நடக்கிறது. தினமும் காலை, மாலை கோயில் வளாகத்திற்குள் சுவாமி புறப்பாடு நடக்கிறது. 2ம் நாளான நேற்று காலை சேஷ வாகனத்திலும், மாலை கருட வாகனத்திலும் பெருமாள் புறப்பாடானார்.