சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே அ.காளாப்பூர் வடக்குவாசல் செல்வி அம்மன் கோயில் ஆடிப்பொங்கல் திருவிழா எளிமையாக நடந்தது. இதையொட்டி காலை முதல் பெண்கள் சமூக இடைவெளியுடன் பொங்கல் வைத்து, மாவிளக்கு எடுத்தும் அம்மனை வழிபட்டனர். சில பக்தர்கள் நேர்த்திக் கடனுக்காக ஆடு, கோழி பலியிட்டு வழிபாடு நடத்தினர். சிறப்பு அலங்காரத்தில் அம்மன் காட்சி அளித்தார். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.