அன்னூர்: அன்னூர் மற்றும் கோவில்பாளையத்தில் ஆடி வெள்ளியை முன்னிட்டு நேற்று அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. அன்னூர், தென்னம்பாளையம் ரோடு, மாரியம்மன் கோவிலில் அதிகாலை முதல் மாலை வரை பக்தர்கள் குவிந்தனர். மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
மன்னீஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள அருந்தவச் செல்வி அம்மன் சன்னதியில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர். ஓதிமலை ரோட்டில் உள்ள பெரியம்மன் கோவிலில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்திருந்தனர். கதவுகரை, இலக்கே பாளையம், கஞ்சப்பள்ளி, பிள்ளையப்பம் பாளையம், உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட ஊர்களில் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. கோவில்பாளையம் வட்டாரத்தில், கோவில்பாளையம் கவைய காளியம்மன் கோவில், குரும்பபாளையம், கொண்டையம் பாளையம் உள்ளிட்ட 10 ஊர்களில் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.