பதிவு செய்த நாள்
31
ஜூலை
2021
02:07
வாலாஜாபாத், : ஏரிக்கரை கன்னியம்மன் கோவிலில் ஆடி வெள்ளி திருவிழா, நேற்று வெகு விமரிசையாக நடந்தது. காஞ்சிபுரம் அடுத்த கோவிந்தவாடி ஏரிக்கரை மீது கன்னியம்மன் கோவில் உள்ளது. இங்கு, ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, பல தரப்பு மக்கள் கன்னியம்மனுக்கு நேற்று பொங்கலிட்டு வழிபட்டனர்.கோவில் முன் இருந்த, உண்டியல் மீது கட்டப்பட்டு இருந்த அம்மன், மலர் அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். காஞ்சிபுரம் - அரக்கோணம் சாலையில் செல்லும் பக்தர்கள், அம்மனை வணங்கி சென்றனர்.அம்மனுக்கு பொங்கல்திருவாலங்காடு: திருவாலங்காட்டில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற காளியம்மன் கோவில், பழையனுார் மடுவங்கரையம்மன் கோவில் உள்ளிட்ட அம்மன் கோவிலில், ஆடி இரண்டாவது வெள்ளிக்கிழமையான நேற்று, நுாற்றுக்கணக்கான பக்தர்கள் வந்தனர்.நெய் தீபம், பொங்கலிட்டு அம்மனுக்கு படையலிட்டு, வழிபட்டு சென்றனர்.