இரு மனம் இணைவதே திருமணம். இது நம்மை ஒழுக்கமாக வாழ வழிவகுக்கிறது. திருமணம் பற்றி நாயகம் சொல்வதைக் கேளுங்கள். * உறவில் திருமணம் செய்தால் பிறக்கும் குழந்தைக்கு ஊனம் ஏற்பட வாய்ப்புண்டு. * பொருளுக்கு ஆசைப்பட்டு திருமணம் செய்தால் பாவம் உண்டாகும். * இறை வழிபாட்டில் ஈடுபாடுள்ள பெண்களைத் திருமணம் செய்தால், நலமான வாழ்வு அமையும். * குறைந்த செலவில் செய்யப்படும் திருமணமே சிறந்ததாகும். * பெண் வீட்டாருக்கு சிரமம் கொடுக்கக் கூடாது. திருமண விருந்தை மணமகனே ஏற்க வேண்டும். இதற்கு ‘வலிமா’ என்று பெயர். * கணவனும், மனைவியும் விட்டுக்கொடுத்து வாழ வேண்டும்.