அசுரர்களை வதம் செய்த ராமபிரான், அந்த பாவம் போக்க வசிஷ்ட முனிவரிடம் ஆலோசனை கேட்டார். அவர் “ராமா! 66 கோடி புண்ணிய தீர்த்தங்களும் கொண்ட புனித நதி காவிரி. கங்கை நதிக்கு இணையான இதை ‘தட்சிண கங்கை’ என்று சொல்வர். இதில் நீராடினால் பாவம் எல்லாம் நீங்கும் ” என்றார். இதனடிப்படையில் ராமர் காவிரியில் நீராடிய நாளே ஆடி பதினெட்டு என்பர்.