கோயிலுக்குச் செல்ல இயலாத நிலையில் கோபுரத்தை தரிசித்தாலும் புண்ணியம் கிடைக்கும். கடவுளின் திருவடிக்கு இணையானதாக கோபுரத்தைச் சொல்வர். துாரத்தில் வரும் போதே கோபுரம் கண்ணில் தெரிந்தும் யார் வணங்குகிறார்களோ அவர்கள், தன் சட்டையில் இருந்து விடுபடும் பாம்பு போல பாவங்களில் இருந்து விடுபடுவர். கோபுரமும் அதைச் சுற்றியுள்ள பகுதியும் எவ்வளவு துாரத்திற்கு தெரிகிறதோ அவ்வளவும் சிவபெருமானின் இருப்பிடமான கைலாயத்திற்கு ஈடானது.