கடவுள் படைப்பில் எதுவும் தாழ்ந்தது அல்ல என்பதை உணர்த்தும் விதமாக எளிய பூக்கள் கூட சிறப்பானதாக கருதப்படுகிறது. பெருமாளுக்கு தும்பைப்பூ மாலையை அணிவித்தால் ஏழைப் பெண்ணுக்கு பொன் தானம் கொடுத்த புண்ணியமும், சிவலிங்கத்திற்கு ஒரு ஊமத்தம்பூ சாத்தினால் லட்சம் பசுக்களை தானம் அளித்த புண்ணியம் கிடைக்கும். ஊமத்தம்பூவை சமஸ்கிருதத்தில் ‘உன்மத்தம்’ என்று சொல்வர். இதை விரும்பி ஏற்பதால் சிவனுக்கு ‘உன்மத்த சேகரன்’ என்ற சிறப்பு பெயருண்டு.