வராகியை வழிபட ஏற்ற திதி பஞ்சமி. மாதம்தோறும் வளர்பிறை தேய்பிறை பஞ்சமியில் வராகியை வழிபட்டால் உடனடியாக நற்பலன் கிடைக்கும். வாராஹி அர்ச்சனை மந்திரங்களில் ‘ஆஷாட பஞ்சமி பூஜன ப்ரியாயை நமஹ’ என்றொரு வரி உண்டு. ஆஷாட பஞ்சமியில் செய்யப்படும் பூஜையைப் விருப்பமுடன் ஏற்பவள் என்பது பொருள். வாராஹியம்மனுக்கு உண்டு. பஞ்சமி திதிக்கு உரியவள் வாராஹி என்பதால் அவளுக்கு ‘பஞ்சமி’ என்றும் பெயர் உண்டு. பஞ்சமியன்று பூஜையறையில் விளக்கேற்றி தானியத்தால் கோலமிட்டு வாராஹியம்மனை வழிபட்டால் எதிரி பயம், கடன் தொல்லை, நிலப்பிரச்னை தீரும். மொத்தத்தில் வாழ்வில் மகிழ்ச்சிக்கு பஞ்சம் இருக்காது.