ஒடிசாவின் கிழக்கு கடற்கரையில் புரி மாவட்டம் சவுரசி என்னுமிடத்தில் பழமையான வாராஹிகோயில் உள்ளது. அரைக்கோள வடிவிலுள்ள கற்கோயில் இது. கலிங்க மன்னர்களால் 10ம் நுாற்றாண்டில் கட்டப்பட்டது. மீன்வாராஹி கோயில் மக்கள் அழைக்கின்றனர். கருவறையில் லலிதாசனத்தில் இருக்கும் அம்மன் நெற்றிக்கண்ணுடன் இருக்கிறாள். இடது கையில் கிண்ணம், வலது கையில் மீனும் உள்ளது. மீன்சோறு பிரசாதமாக அம்மனுக்கு படைக்கப்படுகிறது. * கொனார்க் சூரியக்கோயிலில் இருந்து 30 கி.மீ., * புரி நகரத்திலிருந்து 48 கி.மீ., * புவனேஸ்வரத்தில் இருந்து 62 கி.மீ.,