பதிவு செய்த நாள்
03
ஆக
2021
06:08
ஆடி பதினெட்டாம் பெருக்கு விழாவை அக்கால மக்கள் கொண்டாடிய விதம் பற்றி இலக்கியங்கள் வர்ணிப்பதை பாருங்கள். சோழநாடு எங்கும் ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. ஏரி, குளங்கள் நிரம்பி வழிந்தன. கூட்டம் கூட்டமாக மக்கள் தென்னங்குருத்தால் ஆன சப்பரங்களை இழுத்து கொண்டு காவிரிக்கரை நோக்கிச் சென்றனர். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என வயது வித்தியாசமின்றி அனைவரும் புத்தாடை அறிதுவிழாவில் பங்கேற்றனர். தாழம்பூ, சிவந்த, மல்லிகை, முல்லை, இரவாட்சி, செண்பக மலர்கள், பெண்களில் கூந்தலை அலங்கரித்தன. கூட்டாஞ்சோறு, சித்திரான்னங்களை வைத்து கொண்டு ஆற்றங்கரையில், குடும்பத்தினருடன் வட்டவடிவில் அமர்ந்திருந்தனர். கமூகு மட்டைகளில் உணவை வைத்து சாப்பிட்டனர். சிறுவர்கள் சாப்பிட்ட கமூகு மட்டைகளை கண்வாய்களில் ஏறிந்து அவை வெளியே ஓடி வருவதை கண்டு கைகொட்டி சிரித்தனர். ஆண்கள் தங்கள் காதலியரின் கூந்தலில் சூடிய மலர்களை அவர்கள் எடுத்து கண்வாய்களில் மறுபக்கத்தில் வெளியேறுவதை கண்டு ரசித்தனர். ஓடப்பாட்டு, வெள்ளப்பாட்டு, கும்மிப்பாட்டு ,சிந்துபாடல்களை பெண்கள் பாடி மகிழ்ந்தனர். ஓடி வருவதை