பதிவு செய்த நாள்
01
ஆக
2021
03:08
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோவில் கார் பார்க்கில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம், சி.சி.டி.வி., கேமிரா பழுதாகி கிடப்பதால், பக்தர்கள் அவதிபடுகின்றனர்.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு சொந்தமான கார் பார்க்கில் 200க்கும் மேலான வாகனங்கள் நிறுத்த முடியும். இங்கு திருடர்கள் புகுந்து வாகன கண்ணாடியை உடைத்து விலை உயர்ந்த பொருள்களை திருடி சென்றனர். இதனை தடுக்க பார்க் வளாகத்திற்குள் 20 க்கு மேலான சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தினர். மேலும் பக்தர்கள் தாகம் தணிக்க சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாய் அமைத்து தடையின்றி குடிநீர் வழங்கினர். துவக்கத்தில் சி.சி.டி.வி., குடிநீர் மையத்தை பராமரித்த நிலையில், காலப்போக்கில் கோயில் நிர்வாகம் கண்டுகொள்ளாமல் விட்டதால், தற்போது அனைத்து சி.சி.டி.வி., கேமிராவும், குடிநீர் இயந்திரமும் பழுதாகி முடங்கி கிடக்கிறது. இதனால் பக்தர்கள் குடிநீரை வெளியில் உள்ள கடைகளில் விலைக்கு வாங்கி பருகும் அவலம் உள்ளது. மேலும் வளாகத்திற்குள் திருடர்கள் புகுந்து காரில் உள்ள உடமைகளை திருடும் அபாயம் உள்ளதால், பக்தர்கள் மன நிம்மதி இன்றி கோயிலுக்கு செல்கின்றனர். எனவே பழுதாகி கிடக்கும் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம், சி.சி.டி.வி., கேமிராவை சரி செய்ய கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.