பதிவு செய்த நாள்
02
ஆக
2021
05:08
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்ரர் கோவிலில், ஆடிப்பூரம் உற்சவம் துவங்கியது.
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றத்தில், வேதகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் சுவாமியின் அம்பாள், திரிபுரசுந்தரி அம்மன், பக்தவச்சலேஸ்வரர் கோவிலில் வீற்றுள்ளார். மூலவ அம்பாளிற்கு, தினமும் பாத அபிஷேகம், ஆடி மற்றும் பங்குனி உத்திரம், புரட்டாசி தசமி ஆகிய நட்சத்திர நாட்களில் மட்டும் முழு அபிஷேகம் என, நடைபெறும். ஆடிப்பூர உற்சவம், கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும் 10ம் தேதி வரை, தினமும் காலை 9:00 மணிக்கு, உற்சவ அம்பாளுக்கு, அபிஷேக அலங்கார வழிபாடு நடக்கிறது. உத்திர நட்சத்திர நாளான வரும் 11ம் தேதி மாலை, மூலவ அம்பாளிற்கு முழு அபிஷேகம் அலங்கார வழிபாடு நடக்கிறது. கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக, நாளை வரை பக்தர்கள் தரிசனத்திற்கு நிர்வாகம் தடை விதித்துள்ளது.