காஞ்சிபுரம்:நாளை நடைபெற உள்ள ஆடி கிருத்திகை விழா, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆறு முருகன் கோவில்களில் பக்தர்களின் தரிசனம் ரத்து செய்யப்பட்டு உள்ளது.அறநிலையத் துறை இணை ஆணையர் ஜெயராமன் கூறியதாவது:அரசு உத்தரவுபடி, ஆடி கிருத்திகை அன்று, காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்ரமணிய சுவாமி, வல்லக்கோட்டை, இளையனார்கோவில், குன்றத்துார் ஆகிய முருகன் கோவில்களில் நடை சாற்றப்படும்.செங்கல்பட்டு மாவட்டத்தில் திருப்போரூர், குமரன்குன்றம் ஆகிய இரு கோவில்களிலும் பக்தர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்படுகிறது. திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் இன்றும், நாளையும் பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. வழக்கமான கிருத்திகை மற்றும் தினசரி வழிபாடுகள் சிவாச்சாரியார்கள் மூலம் நடைபெறும்.இவ்வாறு அவர் கூறினார்.