திருப்புத்தூர் கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதியில்லை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஆக 2021 05:08
திருப்புத்துார்: திருப்புத்தூர் பகுதியில் நேற்று அரசின் அறிவிப்பை அடுத்து மதியத்திற்கு பின் கோயில்களில் பக்தர்கள் அனுமதி மறுக்கப்பட்டது.
பிள்ளையார்பட்டி பரம்பரை அறங்காவலர்கள்,திருக்கோஷ்டியூர் சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானம், திருத்தளிநாதர் கோயில் குன்றக்குடி தேவஸ்தானம் நிர்வாகத்தினர் நேற்று உச்சிகால பூஜைகளுக்குப் பின் கோயில் நடை சாத்திய பின் கோயில்களுக்கு முன்பாக பக்தர்களுக்கு அரசின் அறிவிப்பை வெளியிட்டிருந்தனர். கோயிலில் வழக்கமான தினப்படி பூஜைகள் ஆகம விதிகளின்படி நடைபெறும். ஆக.,3 வரை அரசின் அறிவிப்புபடி கோயிலினுள் பக்தர்களுக்கு சுவாமி தரிசனம் செய்ய அனுமதியில்லை. என்று அறிவித்திருந்தனர். திருக்கோஷ்டியூரில் ஆடிப்பூர உஸ்வம் இன்று பக்தர்கள் அனுமதியில்லாமல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. சுவாமி கோயிலினுள்ள பிரகாரம் வலம் வருதல் மட்டும் நடைபெறும். ஆடிக் கார்த்திகை, ஆடி பெருக்கு போன்ற விழாக்களை முன்னிட்டு கோயில்களில் பக்தர்கள் கூட்டம் தவிர்க்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.