திருப்புல்லாணி: கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி திருப்புல்லாணி ஆதிஜெகநாதப்பெருமாள் கோயிலிலும், உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயிலிலும் நடை அடைக்கப்பட்டது. நேற்று முதல் நாளை வரை (ஆக., 1, 2, 3) ஆகிய நாட்களில் கோயில் நடை அடைக்கப்படுகிறது. பக்தர்கள் கோயிலுக்கு வெளியே உள்ள ராஜ கோபுரத்தை வணங்கி விட்டு செல்கின்றனர். கோயில்களில் அன்றாடம் நடக்கக் கூடிய நித்திய பூஜை நடந்து வருகிறது.