இருக்கன்குடி மாரியம்மன் கோவில் தரிசனத்திற்கு தடை பக்தர்கள் ஏமாற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஆக 2021 05:08
சாத்துார்: இருக்கன் குடி மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய திடீர் தடை விதிக்கப்பட்டதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
கொரோனா பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து ஆகஸ்ட் 1, 2, 3 ஆகிய நாட்களில் கோவில்களில் வழக்கம் போல் பூஜைகள் நடைபெறும். ஆனால் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என கலெக்டர் மேகநாதரெட்டி நேற்று முன்தினம் அறிவித்தார். இதனை தொடர்ந்து இருக்கன் குடி மாரியம்மன் கோவிலில் நேற்று பக்தர்கள் தரிசனம் செய்ய அமைதி மறுக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஏராளமான பக்தர்கள் நேற்று தரிசனம் செய்ய வந்திருந்தனர். மாவட்ட நிர்வாகத்தின் தடை காரணமாக கோவில் முன்பு போலீசார் குவிக்கப்பட்டனர். தரிசனத்திற்கு வந்த பக்தர்களை திருப்பி அனுப்பினர் . பலரும் ஆற்றுக்குள் உள்ள தனியார் கொட்டகையில் தங்கியிருந்தனர். போலீசார் எச்சரித்து கூட்டத்தை கலைத்தனர். திடீர் அறிவிப்பு காரணமாக சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர் .