மாவூற்று வேலப்பர் கோயிலில் ஆடிப்பெருக்கு விழா ரத்து
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஆக 2021 05:08
ஆண்டிபட்டி : மாவூற்று வேலப்பர் கோயிலில் ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை விழாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ளது மாவூற்று வேலப்பர் கோயில். மருத மரங்களின் வேர்ப்பகுதியில் இருந்து வரும் நீரூற்று கோயிலின் சிறப்பு.
இக்கோயிலில் இன்று துவங்கும் ஆடி கார்த்திகை, நாளை ஆக. 3ல் ஆடிப்பெருக்கு விழா, ஆக.8ல் துவங்கும் ஆடி அமாவாசை நாட்களில் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கூடுவர். கொரோனா ஊரடங்கு தளர்வுக்குப்பின் சில வாரமாக கோயிலில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் இன்று முதல் ஆக.8 வரை கொரோனா கட்டுப்பாடு மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. பக்தர்கள் கோயிலுக்கு வருவதை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பக்தர்கள் அனுமதி இன்றி கோயிலில் காலை, மாலையில் சுவாமிக்கு பூஜையும், மதியம் கோயில் அன்னதானம் தொடரும் என செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.