பதிவு செய்த நாள்
03
ஆக
2021
08:08
முத்தியால்பேட்டை: முத்தியால்பேட்டை, கீழத் தெருவில், மூலஸ்தம்மன் கோவிலில் 21ம் ஆண்டு கூழ் படையலிடும் விழா, வெகு விமரிசையாக நடந்தது.
இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு, கடந்த ஜூலை 30ம் தேதி காலை 10:00 மணிக்கு, குளக்கரையில் ஜலம் திரட்டும் நிகழ்ச்சி நடந்தது. இதைத்தொடர்ந்து, பகல் 1:00 மணிக்கு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதன் பின், நேற்று முன்தினம் காலை 10:00 மணிக்கு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பக்தர்கள் அலகு குத்தி அம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தினர். பகல் 1:00 மணிக்கு, முத்தியால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித்குமார் குடும்பத்தினர் கூழ் படையலிட்டனர். இரவு 10:00 மணிக்கு, மூலஸ்தம்மன் மலர் அலங்காரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில், கபசுர குடிநீர் மற்றும் முகக்கவசம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு, கொரோனா தடுப்பு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டன.